கோலாலம்பூர்: வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் (பிளஸ்) நேற்றிரவு விரைவுப் பேருந்து உட்பட ஏழு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. அதிவேகமாகச் சென்ற ஹோண்டா அக்கார்ட் கார் ஓட்டுநர் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்டது. சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அருகில் உள்ள தெற்கு பிளஸ் நெடுஞ்சாலையின் வலது பாதையில் நான்கு சக்கர இயக்கி (4WD) வாகனம் ஹோண்டா காரினால் விபத்தை தவிர்க்க முடியவில்லை.
இது விபத்திற்கு வழி வகுத்தது. என்று சுங்கை பூலோ காவல்துறைத் தலைவர் ஹபீஸ் நோர் கூறினார். நடு பாதையில் ஒரு SUV வேகத்தைக் குறைக்க முயன்றது. ஆனால் ஒரு விரைவுப் பேருந்து SUV மீது மோதியது. 4WD வாகனத்தின் 27 வயது ஆடவர் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது பயணியும், ஹோண்டா அக்கார்டின் ஓட்டுநரும் பலத்த காயமடைந்து சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41 (1)ன் கீழ் விசாரிக்கப்படுகிறது. விசாரணை அதிகாரி சே ஹாசன் அம்போக்கை 013-3940423 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு சாட்சிகளை ஹபீஸ் வலியுறுத்தினார்.









