கோலாலம்பூர்:
நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தினை முன்னிட்டு அதிகமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால், நாட்டின் பல முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று போக்குவரத்து மெதுவாக நகர்கிறது.
பிற்பகல் நிலவரப்படி, வடக்கு-தெற்கு விரைவுச்சாலை மற்றும் கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்று, மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (LLM) செய்தித் தொடர்பாளர் கூறினார்.
கோம்பாக்கிலிருந்து சாலைப் போக்குவரத்துத் துறை அமலாக்க நிலையம் நோக்கியுள்ள சாலையில் KM 35.3 இல் டிரெய்லர் பழுதடைந்ததால், கெந்திங் செம்பா சுரங்கப்பாதையை நோக்கிய போக்குவரத்து மெதுவாக உள்ளது என்று அவர் கூறினார்.




















