குவாந்தான்:
நீண்ட வெப்பம் மற்றும் வறண்ட காலநிலைக்குப் பிறகு இன்று அதிகாலை முதல் குவாந்தானில் இடைவிடாமல் கனமழை பெய்தது.
கடந்த சில வாரங்களாக வெப்பமான காலநிலை காரணமாக பல்வேறு இடங்களில் காடு மற்றும் புதரில் தீ பரவியதுடன், புகை சூழ்ந்து சில பகுதிகளில் காற்றின் தரத்தையும் மாசுபடுத்தியது .
முன்னதாக, ஏப்ரல் 8 ஆம் தேதி இங்குள்ள சுங்கை உலர், தாமான் பாண்டான் டாமாய் மற்றும் தாமான் இந்தேரா செம்பூர்ணா ஆகிய இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டதாகவும், தீயில் இருந்து சாம்பலை அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு காற்றுடன் சேர்ந்து வீசுவதாகவும் தெரிவிக்கப்பட்டது என்று, பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் வான் முகமட் ஜைடி வான் இசா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த திடீர் மழை குவாந்தான் வாசிகளை குதூகலத்தில் ஆழ்தியுள்ளது.