கவனம் ஈர்க்கும் நாகபந்தம் டீசர் வீடியோ

கூத்தாச்சாரி மற்றும் டெவில்: தி பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்தவர் அபிஷேக் நாமா. தற்போது இவர் தனது அபிஷேக் பிக்சர்ஸ் -இன் “புரொடக்சன் 9” ஆக உருவாகும் படத்தை, தண்டர் ஸ்டுடியோஸ் சார்பில் மதுசூதன் ராவ் உடன் இணைந்து தயாரிக்கிறார்.

உகாதியை முன்னிட்டு அபிஷேக் பிக்சர்ஸ்-இன் புதிய படத்தின் தலைப்பு வீடியோ மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு நாகபந்தம் – தி சீக்ரெட் ட்ரெஷர் என்று தலைப்பிடப்பட்டு உள்ளது. கே.ஜி.எப். புகழ் அவினாஷ் நடிப்பில், மர்மமான அகோரி கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் வீடியோ ரசிகர்களுக்கு அற்புத அனுபவத்தை வழங்குகிறது. இப்படத்திற்கு சௌந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்ய, அபே இசையமைப்பாளராக பணியாற்றுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here