ஈப்போ:

ஹிலிர் பேராக் மற்றும் கெரியன் மாவட்டங்களில் வெள்ளம் காரணமாக வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை (அக் 24) 59 குடும்பங்களைச் சேர்ந்த 182 பேராக இருந்த நிலையில், தற்போது மூன்று தற்காலிக நிவாரண மையங்களில் மொத்தம் 77 குடும்பங்களைச் சேர்ந்த 245 பேராக அதிகரித்துள்ளது.

ஹிலிர் பேராக் மாவட்டத்தில் 59 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 185 பேர் பாடாங் தெம்பாக் பல்நோக்கு மண்டபத்தில் தங்கியுள்ளனர் என்று, மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் இன்று புதன்கிழமை (அக். 25) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

இந்நிலையில் “15 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 41 பேர், லங்காப், தெலுக் இந்தான் முனிசிபல் கவுன்சில் (MPTI) மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவை தவிர “கெரியானில் உள்ள செக்கோலா கெபாங்சான் சாங்காட் லோபாக் நிவாரண மையத்தில் தற்போது கம்போங் மாடாங் தெங்காவைச் சேர்ந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் தங்கியுள்ளனர் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கிண்டா, கோலா கங்சார், முஅல்லிம், பாகன் டத்தோ, ஹிலிர் பேராக் மற்றும் தென் பேராக் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here