திருமணத்துக்கு பிறகு அபர்ணா தாஸ் நடிப்புக்கு முழுக்கா?

சென்னை:

டந்த 2018ல் வெளியான ‘ஞான் பிரகாசன்’ என்ற படத்தின் மூலமாக மலையாளத்தில் அறிமுகமானவர், அபர்ணா தாஸ். அடுத்து ‘மனோஹரம்’ என்ற படத்தில் நடித்தார். தமிழில் விஜய் நடித்த ‘பீஸ்ட்’, கவின் நடித்த ‘டாடா’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

அவரும், மலையாள நடிகர் தீபக் பரம்போலும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த விஷயத்தை அறிந்த இருவீட்டுப் பெற்றோரும் அவர்கள் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தனர். கடந்த 2010ல் வெளியான ‘மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்’ படத்தின் மூலமாக மலையாளத்தில் அறிமுகமானவர், தீபக் பரம்போல்.

சமீபத்தில் ஹிட்டான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில், சுதி என்ற கேரக்டரின் மூலமாக ரசிகர் களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் அபர்ணா தாஸ், தீபக் பரம்போல் காதல் திருமணம், கேரளாவின் வடக்கஞ்சேரியில் வரும் 24ம் தேதி நடக்கிறது.

முன்னதாக அவர்கள் ‘மனோஹரம்’ படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். திருமணத்துக்குப் பிறகு அபர்ணா தாஸ் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து சினிமாவில் நடிக்க அவர் முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here