குவந்தான்:
கேமரன் ஹைலேண்ட்ஸில் காய்கறி விற்பனை செய்யும் ஒருவர் தொலைபேசி மோசடியில் சிக்கி RM958,088 ஐ இழந்தார்.
கடந்த ஆண்டு மார்ச் 30-ம் தேதி வங்கி அதிகாரியாக என கூறிக்கொண்ட சந்தேக நபர் ஒருவர், பாதிக்கப்பட்ட ஆடவருக்கு முதன்முதலாக ஃபேஸ்புக் மூலம் அழைப்பு வந்தது என்று பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.
இறந்த ஒருவர் பாதிக்கப்பட்ட நபரை வாரிசாக குறிப்பிட்டதாகவும், இறந்தவருக்கு அமெரிக்க டாலர் 26,700,000 (சுமார் 126 மில்லியன் ரிங்கிட்) டெபாசிட் இருப்பதாகவும், இதில் காய்கறி வியாபாரிக்கு 50% கிடைக்கும் என்றும் சந்தேக நபர் கூறினார்.
“பின்னர் சந்தேக நபர் அந்த அழைப்பை ஒரு ‘வழக்கறிஞர் என கூறப்படுபவருடன் இணைத்தார், அவர் பாதிக்கப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட வரிகள், லெவி கட்டணங்களை கட்ட வேண்டும் என்று கூறினார்.
“பாதிக்கப்பட்டவர் பின்னர் தனது சேமிப்பைப் பயன்படுத்தி, மே 9, 2023 முதல் மார்ச் 11, 2024 வரை 26 வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் 70 பரிவர்த்தனைகளைச் செய்தார், ஆனால் வாக்குறுதியளித்தபடி பணம் எதுவும் கிடைக்கவில்லை” என்று யஹாயா கூறினார்.
சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வரும்போது உடனடியாக போலீசாரைரோ அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனோ சரிபார்க்குமாறு அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

























