பெட்டாலிங் ஜெயா:
சைபர் தாக்குதலால் எங்கள் நிறுவனம் பாதிக்கப்பட்டுள்ளதா என எழுந்துள்ள குற்றச் சாட்டுகள் குறித்து தங்கள் அறிந்திருப்பதாகவும் அது குறித்த விரிவான ஒரு அறிக் கையை இன்று தாம் வெளியிடுவதாகவும் Socso இன்று கூறியது.
டிசம்பர் 5 அன்று, Socso இலிருந்து தனிப்பட்ட தரவு கசிந்ததாகக் குற்றம் சாட்டி ஒரு பயனர் BreachForums இல் இடுகையிட்டார். மேலும் 72 மணி நேரத்திற்குள் கூடுதல் மாதிரிகள் வெளியிடப்படும் என்று அந்த பயனர் கூறினார்.
ஒரு நாள் கழித்து, சைபர் செக்யூரிட்டி சம்பவத்தைப் பற்றி Socso இன் நிர்வாகக் குழு சம்பந்தப்பட்ட ஒரு சந்திப்பின் பதிவு என்று கூறி ஒரு வீடியோவிற்கான இணைப்பைப் பயனர் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
இது வைரலாகி Socso விற்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்திருந்த நிலையில்தான் Socso இந்த அறிவிப்ப வெளியிட்டிருக்கிறது.





















