கோலாலம்பூர்:
புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் துணை இயக்குநர் (செயல்பாடுகள்) டத்தோ ஹம்ஸா அமாட் பினாங்கு காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் வரும் மே 13 முதல் அமலுக்கு வருவதாக தேசிய காவல்துறை செயலாளர், துணை ஆணையர் அல்சாஃப்னி இன்று (ஏப்ரல்12) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.