ஆசியா பூப்பந்துப் போட்டியில் காலிறுதி சுற்றில் மலேசிய அணியினரான நூர் இஸுடின்- கோ ஸி ஃபை இணையர் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தைவான் இணையரை தோற்கடித்தனர்.
முதல் செட்டில் 19-21 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி கண்டாலும் தேசிய அணியினர் 2ஆவது செட்டில் 21-19 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றனர். இதனை அடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க மூன்றாம் செட் ஆட்டம் நடத்தப்பட்டது.
அதில் தேசிய இணையர் 21-19 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். இந்த அரையிறுதி சுற்று ஆட்டத்தில் அவர்கள் மலேசியாவைச் சேர்ந்த மற்றோர் இணையரானஏரன் சியா- சோ உய் இக் ஆகியோரை எதிர்கொண்டு விளையாடவுள்ளனர்.
இந்த ஆட்டம் இன்று நடைபெறுகின்றது. இதன் மூலம் இப்போட்டியின் இறுதிச் சுற்றுக்கு மலேசிய அணிகளில் ஏதேனும் ஒன்று நுழைவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.








