கோலாலம்பூர்:
நோன்பு பெருநாள் கொண்டாட்டங்களுக்குப் பிறகு, பல நகரவாசிகள் சொந்த ஊர்களிலிருந்து நகருக்கு திரும்பியதைத் தொடர்ந்து நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து மெதுவாக நகர்கிறது.
இன்று காலை 9.40 மணி முதல், கோலாலம்பூர்-காரக் நெடுஞ்சாலையில் (KLK) பெந்தோங்கில் இருந்து புக்கிட் திங்கிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து மெதுவாக நகர்கிறது என்று LPT இன்று ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் (பிளஸ்) செபெராங் ஜெயாவிலிருந்து பிறை வரை , ஜூரு முதல் ஜூரு டோல் பிளாசா, வடக்கு தைப்பிங் முதல் சாங்கட் ஜெரிங் வரை மற்றும் புக்கிட் கந்தாங் ஸ்டாப் முதல் புக்கிட் பெராபிட் வரை போக்குவரத்து மெதுவான நாடகருவதாக மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (LLM) அறிவித்துள்ளது.
கோலா கங்சாரிலிருந்து சுங்கை பேராக் செல்லும் சாலையிலுள்ள இளைப்பாறும்பகுதி (R&R), மேரு சுரங்கப்பாதைக்கு முன்பும், கோபெங்கிலிருந்து தெம்புருங் குகை வரையிலும் போக்குவரத்து நெரிசலாக உள்ளது.
இதற்கிடையில், தாப்பாவிலிருந்து பீடோர் வரையிலான லெபுஹ்ராயா பிளஸின் தெற்கு திசையில் கிலோமீட்டர் (KM) 327.3 இல் ஒரு விபத்து நடந்துள்ளதாகவும், இதனால் அப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இருப்பினும் பாதைகள் எதுவும் தடைசெய்யப்படவில்லை என்றும் அது கூறியுள்ளது.





















