சிரம்பான்:
தற்போது நாட்டின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ள நிலையில், பள்ளி வெளிப்புற நடவடிக்கைகளை நடத்த திட்டமிட்டால், அதனை எதிர்த்து அதிகாரப்பூர்வ புகாரை பதிவு செய்யுமாறு பெற்றோர்களை வலியுறுத்துவதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.
“இந்த விஷயம் தொடர்பில் ஏதேனும் புகார் இருந்தால், தயவுசெய்து அதை SISPAA க்கு அனுப்புமாறும், தாங்கள் தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறிய அவர், இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், புகார் அதிகாரப்பூர்வமாக செய்யப்பட வேண்டும், எனவேதான் அப்புகார் அடிப்படையில் சரியாக உள்ளதா என்பதை தங்கள் முழுமையாக விசாரிக்க முடியும் என்றும் சொன்னார்.
“இருப்பினும், இந்த விஷயத்தில் இதுவரை எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என்று கல்வி அமைச்சர் கூறினார்.
மேலும் வெப்பமான வானிலை நிலவும்போது அனைத்து தரப்பினரும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை அமைச்சகம் வெளியிட்டுள்ளதாக ஃபட்லினா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.