ஜோகூரை சல்லடை போட்ட குடிநுழைவுதுறை; அந்நிய நாட்டவர்கள் 86 பேர் கைது

ஜோகூர் பாரு:

ஜோகூரின் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய மூன்று நாள் நடவடிக்கையில், ஆறு மாத குழந்தை உட்பட 80க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகளை குடிநுழைவுதுறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த திங்கள் (மே 20) முதல்க் புதன்கிழமை (மே 22) இடையே ஜோகூர் பாரு, பத்து பஹாட் மற்றும் சிகாமாட் ஆகிய இடங்களில் மேற்கொண்ட தொடர்ச்சியான சோதனையில் அனைவரும் கைது செய்யப்பட்டதாக ஜொகூர் மாநில குடிவரவுத் துறையின் இடைக்கால இயக்குநர் முகமட் பைசல் ஷம்சுதீன் கூறினார்.

“பொது மக்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் உள்ள மொத்தம் 42 இடங்களில் சோதனை நடத்தியதாக அவர் சொன்னார்.

இந்தச் சோதனைகளைத் தொடர்ந்து, அனுமதியின்றி பணிபுரிவது, செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட குடியேற்றக் குற்றங்களைச் செய்ததாக நம்பப்படும் 86 வெளிநாட்டினரைக் கைது செய்தோம்” என்று அவர் நேற்று புதன்கிழமை (மே 22) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் “கைது செய்யப்பட்ட அனைவரும் செத்தியா டிராபிகாவில் உள்ள குடிவரவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here