பிரபல நடிகையின் நிர்வாண காட்சி. அன்று தடை இன்று ரிலீஸ்!

 தமிழ் சினிமாவில் கபாலி, ஆல் இன் ஆல் அழகு ராஜா உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே. அதேபோல் தெலுங்கில் ‘ரக்த சரித்ரா’, ‘லயன்’, ‘லெஜண்ட்’ போன்ற படங்களிலும் கலக்கினார். இவரின் சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ராதிகா ஆப்தேவுக்கு தற்போது பாலிவுட்டில் நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அங்கேயே படங்கள் தயாரித்து வருகிறார். ராதிகா ஆப்தே அவ்வப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியும் வருகிறார்.

இந்நிலையில், நடிகை ராதிகா ஆப்தே ஒரு படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியது. அந்த படத்தின் பெயர் The Wedding Guest. 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ராதிகா ஆப்தே நிர்வாணமாக நடித்ததால் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இந்தப் படம் இந்தியாவில் தியேட்டரில் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது இந்த படம் OTT இல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் ஸ்லம் டாக் மில்லியனர் படத்தின் மூலம் பிரபலமான பிரிட்டிஷ் நடிகர் தேவ் படேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் கதையை பொருத்தவரை, ​​ஜெய் என்ற பிரிட்டிஷ் இளைஞன், சமீரா என்ற பாகிஸ்தான் பெண்ணை இந்தியாவில் வசிக்கும் தீபேஷ் என்ற பையனுடன் திருமணம் செய்து கொள்ள ஒப்பந்தம் செய்கிறான்.

ஆனால் உண்மையில் என்ன நடந்தது?, நாடு கடந்ததா? இல்லையா? என்ற சுவாரசியமான கதையுடன் படம் நகர்கிறது. ஆனால், இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு இடையேயான காதல், அந்தரங்கக் காட்சிகள் சற்று அதிகமாகவே உள்ளது.

இந்தத் திரைப்படம் இப்போது Netflix இல் ஸ்ட்ரீம் ஆகிறது. மேலும், இப்படம் தற்போது இந்தி, ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது. நடிகையின் நிர்வாண காட்சி காரணமாக தியேட்டரில் வெளியாக தடை போடப்பட்ட இந்த படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளதால் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இதனிடையே ஓடிடிக்கும் தணிக்கை குழு தேவை என ஒரு தரப்பினர் கருத்து பதிவிட்டுள்ளனர். அதே வேளையில் ஓடிடி தனி நபர் சார்ந்த விருப்பம் என்பதால் அதற்கு தணிக்கை குழு தேவை இல்லை என்பதும் ஒரு தரப்பினரின் கருத்தாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here