கோத்தா கினாபாலு:
நேற்று (ஏப்ரல் 22) பாப்பார், கம்போங் டனாக்கியில் நடந்த விபத்தின் போது, கார் மற்றொரு காரின் மீது மோதியதில் ஒரு பெண் உயிரிழந்தார் அதேநேரத்தில் அக்காரில் இருந்த ஒரு ஆண் பலத்த காயமடைந்தார்.
அங்குள்ள பான் போர்னியோ நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் நடந்த இந்த விபத்தின் போது, மற்ற காரின் ஓட்டுநர் சிறு காயங்களுக்கு உள்ளானார்.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் கிடைக்கவில்லை.
இருப்பினும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு சம்பவம் தொடர்பில் பிற்பகல் 2.50 மணிக்கு அவசர அழைப்பு வந்தது என்றும், உடனே பாப்பார் தீயணைப்பு நிலையத்திலிருந்து ஒரு குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது என்றும் அது முன்னர் தெரிவித்தது.