பிரிமியர் லீக் கிண்ணத்தை  லிவர்புல் கைப்பற்ற முடியாது?

இம்முறை இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை லிவர்புல்  அணி தவறவிட்டு விட்டதாக கால்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சனிக்கிழமை நடைபெற்ற வெஸ்த் ஹாம் அணியுடனான ஆட்டத்தில் லிவர்புல் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டதை அடுத்து அவர்கள் இக்கருத்தினை முன்வைத்துள்ளனர்.

முன்னதாக இந்த ஆட்டம் வெஸ்த் ஹாம் அணி அரங்கில் நடைபெற்றது. அதில் வெஸ்த் அணிக்கான முதல் கோலை ஆட்டத்தின் 43ஆவது நிமிடத்தில் போவன் புகுத்தினார்.

முதல் பாதி நேரம் 1-0 என்ற கோல் கணக்கில் முடிவுற்ற நிலையில் 48ஆவது நிமிடத்தில் ரோபர்ட்சன் லிவர்புல் அணிக்கான முதல் கோலை புகுத்தினார். இந்நிலையில் 65ஆவது நிமிடத்தில் எதிர் அணியினர் தவறுதலாக சொந்த கோல் புகுத்தியதால் லிவர்புல் முன்னிலைப் பெற்றது. ஆனாலும் 77ஆவது நிமிடத்தில் அந்தோணியோ வெஸ்த் ஹாம் அணிக்கான இரண்டாவது கோலைப் புகுத்தி ஆட்டத்தை சமநிலைப்படுத்தினார்.

லிவர்புல் அணி தற்போது பிரிமியர் லீக் புள்ளிப் பட்டியலில் 75 புள்ளிகளை கொண்டுள்ளது. அவ்வணிக்கு இன்னும் 3 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. எனவே அவ்வணியால் இத்தவணையில் பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லவே முடியாது எனவும் சில விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here