ஜீ தமிழின் சரிகமப சீனியர்ஸ் 4ஆம் பருவத்துக்கான மாபெரும் சென்னைத் தேர்வுச் சுற்றுகளுக்குத் தகுதிபெற்ற சிங்கப்பூரின் துர்கா வைஷ்ணவி வெங்கடேஸ்வரன் (நடுவில்), மலேசியாவின் அருளினி ஆறுமுகம் (இடது), திவ்யா சந்திரன் (வலது).சென்னையில் நடக்கவுள்ள ஜீ தமிழ் ‘சரிகமப சீனியர்ஸ்’ 4ஆம் பருவத்துக்கான மாபெரும் தேர்வுச் சுற்றுகளுக்கு சிங்கப்பூரின் துர்கா வைஷ்ணவி வெங்கடேஸ்வரன், (வயது 25) தகுதிபெற்றுள்ளார். சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தாதியாகப் பணிபுரியும் வைஷ்ணவி, ஒரு தீவிர ‘சரிகமப’ ரசிகை. அதன் காரணமாக மார்ச் 31ஆம் தேதி, கோலாலம்பூர் ‘விஸ்மா துன் சம்பந்தன்’ டான்ஸ்ரீ சோமா ஆடிட்டோரியத்தில் நடந்த முதற்கட்டத் தேர்வுச் சுற்றுகளில் அவர் ஆவலோடு பங்குபெற்றார்.
200க்கும் மேற்பட்ட போட்டியாளர்களின் மத்தியில், மலேசியாவில் நடந்த இரு சுற்றுகளையும் வெற்றிகரமாகக் கடந்த அவர், மலேசியாவின் திவ்யா சந்திரன் (வயது 23), அருளினி ஆறுமுகம் (வயது 22) ஆகியோருடன் சென்னையில் மாபெரும் தேர்வுச் சுற்றுகளில் பங்குபெறுகிறார்.சிங்கப்பூர், மலேசிய கலைஞர்களுக்கு உலகளவில் சிறக்கும் வாய்ப்பை வழங்குவதில் ஜீ டிவிவழி தீர்மானமாக உள்ளது.‘யார் அந்த ஸ்டார்’ 2020 போட்டியில் ‘சின்னக் குயில்’ சித்ராவின் முன்னிலையில் பாடி, காலிறுதிச் சுற்று வரை முன்னேறிய வைஷ்ணவி, அப்போதிலிருந்தே சங்கீதம் கற்கவும் தொடங்கினார்.




















