மேரு, தாமான் பெரிண்டஸ்ட்ரியானிலுள்ள இரண்டு பெயிண்ட் தொழிற்சாலைகளில் தீ!

ஷா ஆலம்:

மேருவிலுள்ள பெயிண்ட் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று (ஏப்ரல் 29) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், அது எரிந்து நாசமானது.

சம்பவம் குறித்து தமக்கு காலை 6.34 மணிக்கு அழைப்பு வந்தது என்று, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் அமாட் முக்லிஸ் மக்தார் கூறினார்.

காப்பார், வடகிள்ளான் மற்றும் அண்டாலாஸ் தீயணைப்பு நிலையங்கள் உட்பட மொத்தம் எட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் இருந்து இயந்திரங்களுடன் மொத்தம் 39 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு சென்றனர் என்றார்.

“அவர்கள் அங்கு சென்றபோது பெயிண்ட் பதப்படுத்தும் ஆலையின் இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அப்போது தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது என்றும் பெரும்பாலான கட்டிடங்கள் ஏற்கனவே தீ நாசமாக்கியிருந்தது ,” என்று அவர் தஇன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் உயிர் சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை என்று அமாட் முக்லிஸ் கூறினார்.

மேலும் சம்பவத்திற்கான காரணம் மற்றும் மொத்த இழப்புகள் இன்னும் விசாரணையில் உள்ளன என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here