உங்கள் ஓட்டு – உங்கள் உரிமை சிந்தித்து வாக்களியுங்கள்

பி.ஆர். ராஜன்

வரும் மே 11ஆம் தேதி  கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. பக்காத்தான் ஹராப்பான் அதன் ஜசெக வேட்பாளர் பாங் சோக் தாவை களமிறக்கியிருக்கிறது. பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் பெர்சத்து கட்சியின் வேட்பாளர் கைருல் அஸாரி சாவுட் போட்டியில் குதித்திருக்கிறார்.

இத்தொகுதியில் மொத்தம் 40,024 பதிவு பெற்ற வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுள்  மலாய்க்காரர்கள் 20,142 பேர், (50.3 விழுக்காடு),  சீன வாக்காளர்கள் 12,395 பேர் (31.0 விழுக்காடு). இந்திய வாக்காளர்கள் 6,995 பேர் (17.5 விழுக்காடு.) மற்ற இனத்தவர்கள் 492 பேர் (1.2. விழுக்காடு).

ஒவ்வோர்  இனத்தவரும்  தாங்களே இத்தொகுதியில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக்கூடிய ‘கிங்மேக்கர்ஸ்’ என்று கூறிக் கொள்கின்றனர். இதில் தவறு ஏதும் இல்லை. ஆனால்,  வாக்குரிமைப் பெற்ற  ஒவ்வொரு வாக்காளரும் ‘கிங்மேக்கர்’ என்பதுதான் நிதர்சனம்.

யாருக்கு ஓட்டுப் போட வேண்டும். யாருக்குப் போடக்கூடாது என்பதை தீர்மானிக்கும்  மிகப் பெரிய ஜனநாயக பொறுப்பு ஒவ்வொரு வாக்காளருக்கும் உண்டு.  இவருக்கு ஓட்டுப் போடக்கூடாது, அவருக்கு ஓட்டுப் போடக்கூடாது என்று வற்புறுத்துவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. இது ஜனநாயகத்திற்குப் புறம்பான ஒரு செயலாகும்.

கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதியில் 16 இடங்களில் இந்த வாக்காளர்கள் வாழ்கின்றனர். இந்த இடங்களில் இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கையை பார்ப்போம்.

கம்போங் பாரு கெர்லிங் (232),  பெர்த்தாக் (97), அம்பாங் பெச்சா (784),  கம்போங் பாரு சீனா கேகேபி (412), கம்போங் ஆயர் ஜெர்னே (558), பண்டார் கேகேபி (554), கெர்லிங் (377), லெம்பா பெரிங்கின் (656),  லாடாங் நைகல் கார்டனர் (536).

ஜாலான் கோலக் காலி (1,085), கம்போங் பாரு ராசா (107),  பெக்கான் ராசா (300), கம்போங் பாரு பத்தாங் காலி (76), உலுயாம் லாமா (24),  பண்டார் உத்தாமா பத்தாங் காலி (1,079), பத்து 30 உலுயாம் (88)  என்ற எண்ணிக்கையில் இந்திய வாக்காளர்கள் உள்ளனர்.

அதேபோன்று  கம்போங் பாரு கெர்லிங்கில் 171 மலாய் வாக்காளர்களும் 870 சீன வாக்காளர்களும் உள்ளனர். பெர்தாக்: மலாய்க்காரர்கள் 278, சீனர்கள் 30. அம்பாங் பெச்சா:  மலாய்க்காரர்கள் 3,237, சீனர்கள் 492. கம்போங் பாரு சீனா கேகேபி: மலாய்க்காரர்கள் 130, சீனர்கள் 1,833. பண்டார் கேகேபி: மலாய்க்காரர்கள் 1,915, சீனர்கள் 1,103. கம்போங் ஆயர் ஜெர்னே: மலாய்க்காரர்கள் 2,654,  சீனர்கள் 500. கெர்லிங்: மலாய்க்காரர்கள் 1,214, சீனர்கள் 586.  லெம்பா பெரிங்கின்: மலாய்க்காரர்கள் 532, சீனர்கள் 50.  லாடாங் நைகல் கார்டனர்: மலாய்க்காரர்கள் 268, சீனர்கள் 94.

ஜாலான் கோல காலி: மலாய்க்காரர்கள் 1,486,  சீனர்கள் 1,129. கம்போங் பாரு ராசா: மலாய்க்காரர்கள் 15,  சீனர்கள் 1,555. பெக்கான் ராசா: மலாய்க்காரர்கள் 269, சீனர்கள் 995.  கம்போங் பாரு பத்தாங் காலி: மலாய்க்காரர்கள் 89,  சீனர்கள் 986.  உலுயாம் லாமா: மலாய்க்காரர்கள் 256, சீனர்கள் 665.  பண்டார் உத்தாமா பத்தாங் காலி: மலாய்க்காரர்கள் 6,864, சீனர்கள் 826. பத்து 30 உலுயாம்:  மலாய்க்காரர்கள் 764, சீனர்கள் 681  என்ற எண்ணிக்கையில் பதிவு பெற்ற வாக்காளர்கள் உள்ளனர்.

இந்நிலையில்  ஆளும் அரசாங்கத்தை ஆதரிப்பதன் மூலம் இத்தொகுதியில் வாழும் இந்தியர்களின் வாழ்வாதாரம் நிச்சயமாக ஏதாவது ஒரு வழியில் உறுதி செய்யப்படும். உணர்ச்சிவயப்பட்டு முடிவுகள் எடுத்தால்  அதற்கான விலையையும் தந்துதான் ஆகவேண்டும்.

இந்திய சமுதாய மக்களின் உணர்வுகளை நாம் மதிக்கின்றோம். அதே சமயத்தில்  தங்களுடைய உரிமைகளை உரிமையோடு கேட்பதற்கு  தங்களின் முடிவு மிகச் சரியாக இருக்கவேண்டும். இத்தொகுதியில் வாழ்வது நீங்கள். எது சரி என்பது  உங்களுக்கு மட்டுமே தெரியும். உங்கள் ஜனநாயகக் கடமையை மிகச் சரியாக செய்திடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here