புத்ராஜெயா: அரசு ஊழியர்களின் ஊதியத்தை அரசாங்கம் இந்த ஆண்டு 13%க்கும் அதிகமாக உயர்த்தும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். இந்த அகவிலைப்படி உயர்வு இதுவரை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாத உயர்வாக இருக்கும் என்றார். முன்பு 13% ஆக உயர்ந்த அதிகரிப்பு இருந்தது. இந்த ஆண்டு அதை விட அதிகமான அதிகரிப்பை அறிவிப்பேன்.
புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற தொழிலாளர் தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அன்வார், நான் உறுதியளித்தபடி இந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஊதிய உயர்வை அமல்படுத்துவோம்.