கங்கார்:
தற்போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் பெர்லிஸ் மாநில நிர்வாகத்தினரிடம் மேற்கொண்டு வரும் விசாரணைகளைத் தொடர்ந்து, பெர்சத்து கூட்டணி கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு பிரதிநிதியும் மாநில அரசாங்கத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்க தயாராக இருக்கிறது என்று, மாநில பெர்சத்து இணைப்புக் குழுத் தலைவர் அபுபக்கர் ஹம்சா தெரிவித்துள்ளார்.
மாநில தலைமையில் மாற்றம் செய்வது குறித்து முடிவெடுப்பதை பெர்லிஸ் துவாங்கு ராஜா சையத் சிராஜுதீன் புத்ரா ஜமாலுல்லைல் மற்றும பெரிக்காத்தான் நேஷனல் தலைவரின் கையிலில் விட்டுவிடுகிறோம் என்று அவர் கூறினார்.
“இப்போதைக்கு, மந்திரி பெசாரின் நிலை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஏனெனில் மந்திரி பெசார் முகமட் சுக்ரி ரம்லி கோலாலம்பூரில் இருந்து திரும்பியுள்ளார். இருப்பினும் அவர் அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
“எது நடந்தாலும், பெர்லிஸ் மாநில பெர்சத்து தயாராக இருக்கிறது” என்று அவர் சொன்னார்.