கோத்தா பாரு:
பெங்கலன் சேப்பாவில் உள்ள சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலைய ஓடுபாதையை மேலும் 400 மீட்டர் நீட்டித்து, அதனை மேம்படுத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஒப்புதலளித்துள்ளார்.
கிளந்தான் மந்திரி பெசார் டத்தோ முகமட் நசுருதீன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக, அதாவது கிளந்தான் விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக மாற்றுவதற்கும், விமான நிலையத்தின் ஓடுபாதையில் 400 மீட்டர் கூடுதலாக விஸ்தரிக்கவும் மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
கிளந்தான் மாநில அரசின் இந்த முன்மொழிவை மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது என்றும், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானத்தை விரைவுபடுத்துமாறும் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக்கிடம் தாம் கேட்டுக் கொள்வதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
முதல் கட்ட பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், மாநில மந்திரி புசார் டத்தோ முகமட் நசுருடின் தாவூட் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.