கோலா குபு பாரு இடைத்தேர்தல்: இதுவரை 7 போலீஸ் புகார்கள், இருவர் கைது

கோலாலம்பூர்:

கடன் ஏப்ரல் 27 அன்று கோலா குபு பாரு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து நேற்று (மே 5) வரை. உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறை மொத்தம் ஏழு போலிஸ் அறிக்கைகளைப் பெற்றுள்ளது என்றும் அதில் இரண்டுக்கு விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டதாக சிலாங்கூர் துணை போலீஸ் தலைவர் டத்தோ எஸ்.சசிகலா தேவி தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் குற்றம் தொடர்பில் இருவரை கைது செய்துள்ளதாக அவர் நேற்று வெளியிட்டுள்ள ஓர் அறையில் கூறினார்.

“தேர்தல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 4(A) அல்லது தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் கீழ் விசாரணை ஆவணங்களில் ஒன்று திறக்கப்பட்டது, மற்றொன்று தேர்தல் குற்றச் சட்டம் 1954 இன் பிரிவு 4(a) இன் கீழ், மாற்றங்களை உள்ளடக்கியது என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here