செல்பி எடுக்க வந்த ரசிகரை தாக்க முயன்ற சகீப் அல் ஹசன் – வைரலாகும் வீடியோ

வங்காளதேச அணியின் ஆல் ரவுண்டரான சகிப் அல் ஹசன். இவர் தொடர்பான செய்திகள் அடிக்கடி வந்து சர்ச்சையை ஏற்படுத்தும். அந்த வகையில் அவர் தற்போது
புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தாகா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது செல்பி எடுக்க வந்த ரசிகரை சகிப் அல் ஹசன் தாக்க முயன்றுள்ளார். அது தொடர்பான ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சகிப் அல் ஹசன் சக வீரர்களுடன் பேசி கொண்டிருப்பார். அந்த நேரத்தில் அவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு ரசிகர் செல்பி எடுக்க அனுமதி கேட்பார். இதனை ஏற்றுக் கொள்ளாத சகிப் அவரது செல்போனை தடுத்து விடுவார். மேலும் ரசிகரின் கழுத்தை பிடித்து அவரை

தாக்க முயற்சி செய்வார். இதனால் மனமுடைந்த ரசிகர் அங்கிருந்து சென்று நாற்காலியில் சோகத்துடன் அமர்ந்து இருப்பார்.

இந்த வீடியோவில் சகிப்பின் செயல் மிகவும் மோசமானதாக இருந்தாக ரசிகர்கள்
மட்டுமின்றி முன்னாள் வீரர்கள் கூட இவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here