உரிமையாளரை செல்லமாக சீண்டிய சிறுத்தை – வைரலாகும் வீடியோ

பாகிஸ்தானில் சில பிரபலங்கள் சிங்கம்,புலி, பாம்பு, முதலை,சிறுத்தை உள்ளிட்ட காட்டு விலங்குகளை கூட அனுமதி பெற்று வீட்டில் வளர்த்து வருகிறார்கள். அந்தவகையில் வீடுகளில் ஏராளமான விலங்குகளை வளர்த்து அவற்றுடன் விளையாடுவது போன்று எடுத்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பிரபலம் ஆனவர் நவுமன்ஹாசன்.

இவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புதிய வீடியோ ஒன்றில், அவர் வீட்டில் செல்லமாக வளர்த்து வரும் சிறுத்தை திடீரென அவரை சீண்டிய காட்சிகள் உள்ளது.அந்த வீடியோவில் நவுமன் மற்றொரு நபருடன் ஷோபாவில் அமர்ந்திருக்கிறார்.

அவர்களுக்கு அருகில் நவுமன் வளர்த்து வரும் சிறுத்தை செல்கிறது. அப்போது சிறுத்தையை நவுமன் தடவிக் கொடுக்க முயற்சிக்கும் போது திடீரென சிறுத்தை அவரைசீண்டுவது போன்று காட்சி உள்ளது. இந்த வீடியோ வைரலாகி இன்ஸ்டாகிராமில் 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here