சரவாக்கில் டெல்தா வகையுடன் தொடர்புடைய 180 தொற்றுக்கள் இனங்காணப்பட்டது; கூச்சிங்கில் அதிகூடிய தொற்றுக்கள் பதிவு

கூச்சிங்: யுனிவர்சிட்டி மலேசியா சரவாக் (UNIMAS), சமுக சுகாதார மருத்துவ நிறுவனம் (IHCM) என்பன சரவாகில் டெல்தா வகையின் மாறுபட்ட கோவிட் -19 வைரஸின் தாக்கம் கொண்ட மேலும் 180 புதிய தொற்றுக்களை கண்டறிந்துள்ளது.

IHCM இயக்குனர் டாக்டர் டேவிட் பெரேரா இது பற்றி கூறிய போது , 355 கோவிட் -19 தொற்றுக்களின் (மாதிரிகள்) எடுக்கப்பட்டு அவற்றில் 180 தொற்றுக்கள் டெல்தா திரிபுடைய வைரஸ்க்கு சாதகமான பதிலை பதிவு செய்தன. இது சரவாக் நகரில் வழக்கமாக உள்ள SARS-COV-2 வகைகளின் கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பின் ஒரு பகுதியாக இவை சமீபத்தில் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

“டெல்தா மாறுபாடுடைய வைரஸ் கூச்சிங், பாவு, லுண்டு, கோத்தா சமரஹான், சிமுஞ்சான், ஸ்ரீ அமான், மிரி மற்றும் பிந்துலு ஆகியவற்றில் கண்டறியப்பட்டது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

“மொத்தத்தில், 65 சதவிகிதம் (137 தொற்றுக்களில் கூச்சிங்கில் (124 ), லுண்டுவில் (8) மற்றும் பாவுவில் (5) கண்டறியப்பட்டது.”

டெல்தா வகை வைரஸை விட , சமீபத்தில் இந்தோனேசியாவில் கண்டறியப்பட்ட கடுமையான மாறுபாடுடய வைரஸின் ஏழு தொற்றுக்களும் (B.1.466.2) மற்றும் பீட்டா மாறுபாடு (B.1.351) இன் இரண்டு தொற்றுக்களும் கண்டறியப்பட்டதாக டாக்டர் பெரேரா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here