கர்நாடக:
கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் பிரதமர் மோடி தங்கியதற்கான கட்டணத்தில் ரூ.80 லட்சத்தை ஓராண்டாக செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது.
2023-ம் ஆண்டு கர்நாடகத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மைசூருவில் உள்ள அந்த பிரபல ஹோட்டலில் பிரதமர் மோடி தாங்கியுள்ளார், இந்நிலையில் ரூ.80 லட்சம் வாடகை பாக்கியை செலுத்த தவறினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹோட்டல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, இந்தக் குட்டு வெளிப்பட்டது.