கோத்தா கினாபாலு:
நேற்று (மே 26) மாலை 4 மணியளவில் ஒரு பெண்ணின் சடலம் இங்குள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் கதவுக்கு முன்னால் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
உள்ளூர்வாசியான 24 வயதுடைய பெண், நான்காவது மாடியில் இருந்து விழுந்தது விசாரணையில் தெரியவந்ததாக, பெனாம்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் துணைக் கண்காணிப்பாளர் எர்வான்ஸ்யா அப்துல் பாசிர் கூறினார்.
மேலும், பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அங்கு வந்த மருத்துவ அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டதாக எர்வன்ஸ்யா கூறினார்.
“உடல் பிரேத பரிசோதனைக்காக குயின் எலிசபெத் மருத்துவமனை 1 க்கு அனுப்பப்பட்டுள்ளது,” என்று கூறிய அவர், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சொன்னார்.
விசாரணைக்கு இடையூறு ஏற்படாத வகையில், இந்த விவகாரம் குறித்து எந்தவித ஊகங்களையும் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.





















