மியன்மாரில் வலுவிழக்கிறதா இராணுவ ஆட்சி?

நேப்பிடா:

மியான்மாரை ஆளும் இராணுவம் பல பகுதிகளில் அதன் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் இனவாத இராணுவக் குழுக்கள் விரிவடைந்து, சில வட்டாரங்களை அவற்றின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக மியன்மார் பூசலை ஆராயும் இரண்டு அறிக்கைகள் தெரிவித்தன.

55 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டுள்ள மியன்மாரில் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து நிலைமை கொந்தளிப்பாகவே உள்ளது.

நோபெல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சி அம்மையார் வழிநடத்திய அரசாங்கத்தை அந்நாட்டு இராணுவம் வெளியேற்றியதே அதற்குக் காரணம். அதனால் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

மியன்மாரின் இனவாதக் கிளர்ச்சிக் குழுக்கள் ஒன்றிணைந்து, இராணுவத்திற்கு எதிராகச் செயல்படத் தொடங்கின.

மியன்மார் இராணுவம் நாட்டின் மக்கள்தொகையில் 67 விழுக்காட்டினர் வசிக்கும் பகுதிகளில் 86 விழுக்காட்டு நகரங்களில் முழுக் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக மியன்மார் சிறப்பு ஆலோசனை மன்றம் கூறியது.

அது குறித்து ராய்ட்டர்ஸ் நிறுவனம் கேட்ட கருத்துக்கு இராணுவப் பேச்சாளர் ஒருவர் பதில் அளிக்கவில்லை.

சென்ற அக்டோபரில், மூன்று இனவாதக் குழுக்கள் ஒன்றிணைந்து ‘ஓப்பரேஷன் 1027’ நடவடிக்கையை வழிநடத்தின. அப்போது மியன்மார் இராணுவம் வலுவிழக்கத் தொடங்கியது.

இனவாதக் குழுக்கள் நடத்திய தொடர்த் தாக்குதல்களால் மியன்மார் இராணுவம் முக்கியப் பகுதிகளிலிருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here