கோலாலம்பூர்:
கடந்த ஆண்டு டாமான்சாரா டாமாயில் உள்ள அவரது வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவிலுள்ள ஆற்றின் அருகே இறந்து கிடந்த ஆட்டிஸம் நோயால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் ஜெய்ன் ரய்யான் அப்துல் மதினின் கொலை தொடர்பில் சிறுவனின் பெற்றோர், கொலைக்காக தண்டனைச் சட்டம் 302 பிரிவின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டனர்.
சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் இந்த விஷயத்தை உறுதி செய்தார்.
சம்பவம் நடந்த முதல் நாளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு மற்றும் விசாரணைகளின் அடிப்படையில், சந்தேக நபர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டதாக ஹுசைன் உமர் கூறினார்.
“சந்தேக நபர்கள் இருவரும் இன்று முதல் 7 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள்” என்று அவர் மேலும் கூறினார்.