யாருக்கு அதிக விக்கெட்? தேர்ந்தெடுத்த ரிக்கி பாண்டிங்!

 

யாருக்கு அதிக விக்கெட்டுகள்?

உலகில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துள்ள இந்த டி20 உலகக்கோப்பை தொடரில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது? எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு செல்லும்? எந்த வீரர் அதிக விக்கெட்டுகள் மற்றும் அதிக ரன்கள் அடிக்கப்போகிறார்கள் என்ற கருத்தை பல்வேறு முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் யார் அதிக விக்கெட்டுகள் வீழ்த்துவார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ரிக்கி பாண்டிங், “2024 டி20 உலகக்கோப்பை தொடரில் யார் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தப்போகிறார் என்று கேட்டால், என்னுடைய பதில் ஜஸ்பிரித் பும்ராதான். அவர் ஒரு சிறந்த செயல்திறனுடன் பல ஆண்டுகளாக அபாரமான பங்களிப்பை கொடுத்துவருகிறார். தற்போது ஒரு சிறந்த ஐபிஎல் தொடரை பெற்றிருந்தார்.

அவரால் புதிய பந்தில் ஸ்விங் செய்யமுடிகிறது, சிறந்த சீம் பொசிஸனை பெற்றுள்ளார். ஐபிஎல் முடிவில் அவரது எகானமி ரேட் ஒரு ஓவருக்கு வெறும் ஏழு ரன்களுக்கும் குறைவாகவே இருந்தது” என்று ஐசிசி மதிப்பாய்வில் பாண்டிங் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “பேட்ஸ்மேன்களுக்கு கடினமான ஓவர்களை வீசுவதால் பும்ரா தொடர்ந்து விக்கெட்டுகளை எடுக்கிறார். டி20 கிரிக்கெட்டில் கடினமான ஓவர்களை வீசும்போது, ​​அது உங்களுக்கு நிறைய விக்கெட்டுகளை எடுக்க வாய்ப்பளிக்கிறது. அதனால், பும்ராவிற்குதான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்பிருக்கிறது. நான் அவருக்கே வாய்ப்பென சொல்வேன்” என்று மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here