கோலாலம்பூர் :
மலேசியத் துறைமுகங்களில் இஸ்ரேலை தளமாகக் கொண்ட கப்பல் நிறுவனங்களின் கண்டெய்னர்கள் வராது இருப்பதை அல்லது அனுமதி கொடுக்கக்கூடாது . இதனை போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும் என்று துணைப் பிரதமர் அமாட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
“எங்களுக்கு இஸ்ரேலுடன் இராஜதந்திர அல்லது நேரடி வணிக உறவுகள் இல்லை. இந்த விவகாரம் ஒட்டுமொத்த மலேசியர்களுக்கும் மிகவும் நெருக்கமானது, இது தொடர்பில் நாம் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று நினைக்கிறேன்.
“இவ்வாறான செயல் மீண்டும் நடக்காமல் இருக்க அமைச்சகம் மேலும் கண்காணிப்பை மேற்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் நேற்று ஜோகூரில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மேலும் ஞாயிற்றுக்கிழமை, இஸ்கண்டார் புத்திரி துறைமுகத்தில் இஸ்ரேலை தளமாகக் கொண்ட ZIM என்ற கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு கொள்கலன் இருப்பது பற்றிய விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்றும் ஜாஹிட் கூறினார்.
குறிப்பாக கன்டெய்னரை நாட்டிற்குள் அனுமதிப்பதில் கடுமையான விதிகள் எப்படி மீறப்பட்டன என்பதை கண்டறிய துறைமுகம் மற்றும் சுங்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சனிக்கிழமையன்று, கோத்தா இஸ்கண்டார் சட்டமன்ற உறுப்பினர் பண்டக் அமாட், இஸ்ரேலில் இருந்து கொண்டு வரப்பட்ட கொள்கலன்களை துறைமுகம் இன்னும் ஏற்றுக்கொள்வதாகக் கூறி, குடியிருப்பாளர்களிடமிருந்து புகார்களைப் பெற்றபோது தான் ஆச்சரியமடைந்ததாகக் கூறியதாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.




















