சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலின் தேதி நாளை அறிவிக்கப்படும்

கோலாலம்பூர்:

பினாங்கு மாநிலத்தில் உள்ள சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினர் அண்மையில் காலமானதைத் தொடர்ந்து, அத்தொகுதியில் தேர்தலை நடத்துவதற்கான தேதி நாளை நிர்ணயிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பினாங்கு மாநில அரசியலமைப்பின் கீழ், காலியான இருக்கையுள்ள சட்டமன்றத்தொகுதியில் குறித்த காலியிடம் ஏற்பட்ட தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் அவ்விடம் நிரப்பப்பட வேண்டும்.

“அதன்படி, பினாங்கில் உள்ள N.20 சுங்கை பாக்காப்பிற்கான சிறப்பு இடைத்தேர்தல் கூட்டம் ஜூன் 6 ஆம் தேதி நடைபெறும்” என்று தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ இக்மல்ருடின் இஷாக் முன்னர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here