கோலாலம்பூர் :
கொலை செய்யப்பட்ட சிறுவன் ஜெய்ன் ராய்யானின் கொலை விசாரணைக்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் பெற்றோரின் தடுப்புக் காவல் நீட்டிக்க விண்ணப்பம் செய்யப்படும் என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் உமர் கான் தெரிவித்துள்ளார்.
சிறுவனின் பெற்றோரின் தற்போதைய தடுப்புக் காவல் நாளையுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், அதனை நீட்டிக்க காவல்துறை முடிவு செய்துள்ளதாகவும், அவர்களிடம் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட உள்ளதால் நிச்சயமாக விளக்கமறியல் காலம் நீட்டிக்கப்படுவது அவசியம் என்றும் அவர் சொன்னார்.
கடந்த வெள்ளிக்கிழமை குறித்த தம்பதியினர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.