முதியவரின் உயிரிழப்பிற்கு காரணமான லோரி ஓட்டுநருக்கு 100க்கும் மேற்பட்ட சம்மன்கள் இருப்பதாக போலீசார் தகவல்

ஈப்போவில் லோரி மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்  காவல்துறைத் தலைவர் Abang Zainal Abidin Abang Ahmad, 44 வயதான லோரி ஓட்டுநரின் பெயரில் 100 நிலுவையில் உள்ள போக்குவரத்து சம்மன்கள் இருப்பது கண்டறியப்பட்டது.  அதில் மூன்று சாலை விபத்துக்கள் உட்பட என்றார்.

வாகனத்தை பின்னோக்கி எடுக்க தொடங்கியபோது 66 வயதான பாதசாரி பின்னால் இருந்ததாக ஜைனல் கூறினார்.  வயிற்றில் பலத்த காயம் காரணமாக பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. லோரி ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். உடல்  பிரேத பரிசோதனைக்காக ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டதாக ஜைனல் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here