தினமும் சொல்ல வேண்டிய விநாயகர் மந்திரங்கள்

முழுமுதற் கடவுளாக விளங்கும் விநாயகப் பெருமான் ஞானத்தின் வடிவமானவர். அவரது உடலின் அமைப்பே ஓம்காரத்தின் வடிவமாக அமைந்தது என்பதால் ஞானத்தையும், நினைவாற்றலையும், எடுத்த காரியங்களில் வெற்றி தரும் தெய்வமாகவும் இவரே கருதப்படுகிறார். பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், புதிய வகுப்புகளுக்கு செல்ல மாணவர்களும் தயாராகி வருகின்றனர். வரும் கல்வியாண்டில் மாணவர்கள் கல்வியில் சிறந்த விளங்க, தினமும் விநாயகப் பெருமானின் இந்த மந்திரங்களை சொல்லி வந்தால், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். படிப்பில் கவனமின்மை, ஞாபக மறதி போன்ற பிரச்சனைகள் இவற்றால் நீங்கும்.

பொதுவாகவே மந்திரங்களை உச்சரிப்பது என்பது மனதை ஒருநிலைப்படுத்த உதவக் கூடியதாகும். என்ன தான் கஷ்டப்பட்டு படித்தாலும் படித்த பாடங்கள் மனதில் பதிந்து, நினைவில் தங்குவதற்கு இறையருள் என்பது அவசியமாகும். இதற்கு மூலப் பொருளான விநாயகரின் மந்திரங்களை தினமும் தொடர்ந்து சொல்லி வந்தால் மனதில் நமக்குள் ஏற்படும் மாற்றங்களால் மனம் எளிதில் ஒருநிலைப்பட்டு, நினைவாற்றல் பெருகும்.

கல்வியில் சிறப்பதற்கான மந்திரம் :
* வெற்றி தரும் மந்திரம் :

ஓம் க்ரீம் க்லைம் ஸ்ரீம் கங் கணபதி திரிலோக வஸ மாயை ஸ்வாஹா

* சித்தி விநாயகர் மந்திரம் :

ஓம் நமோ சித்தி விநாயகாய
சர்வ காரிய கர்த்ரே ஸர்வ விக்ன பிரஷம்நயே
சர்வர்ஜய வஷ்யகர்ணாய ஸ்ர்வஜன்
ஸர்வஸ்த்ரீ புருஷ்
ஆகர்ஷணாய ஸ்வாஹா

* தடை விலக்கும் மந்திரம் :
வக்ரதுண்ட மஹாகாய
சூர்யகோடி ஸமப்ரப
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ
கார்யேஷூ ஸர்வதா
* ஞான பெறுவதற்கான கணேச காயத்ரி மந்திரம் :

ஓம் ஏகந்தாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி பிரசோதயாத்

* தைரியம் பெற மந்திரம் :

பிரணம்ய சிரஸ தேவம்
கெளரி புத்ரம் விநாயகம்

* நல்ல மதிப்பெண்கள் பெற செய்யும் மந்திரம் :

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் கணபதயே
வர வரதா சர்வ ஜனம்மே வஷமானாய ஸ்வாஹா

* கவனம் சிதறாமல் இருக்க செய்யும் மந்திரம் :

ஓம் கம் கணபதயே நமஹ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here