செர்டாங்: உள்ளூர் பச்சரிசிக்கான விலை உச்சவரம்பை அக்டோபர் மாதத்திற்குள் அரசாங்கம் இறுதி செய்யும் என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் முகமது சாபு தெரிவித்தார். இந்த விவகாரம் இன்னும் விவாத கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் முடிவு செய்யப்படும் என்று மலேசியா வேளாண்மை தோட்டக்கலை & வேளாண் சுற்றுலா நிகழ்ச்சியை இன்று தொடக்கி வைத்த பிறகு அவர் கூறினார்.
மாட் சாபு என்று அழைக்கப்படும் முகமட், விலை உச்சவரம்பை மறுபரிசீலனை செய்ய சிறிது காலம் எடுக்கும். ஏனெனில் இது பல அமைச்சகங்களை உள்ளடக்கியது. எனது அமைச்சகம் மட்டுமல்ல, பொருளாதார அமைச்சகம் மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகமும் கூட என்று அவர் கூறினார்.
கடந்த நவம்பரில், வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள நெல் மற்றும் அரிசி ஒழுங்குமுறைப் பிரிவு, உள்ளூர் வெள்ளை அரிசிக்கான விலை உச்சவரம்பு கிலோவுக்கு 2.60 ரிங்கிட்டில் இருந்து 3.20 ரிங்கிட் வரை உயர்த்தப்பட வேண்டும் என்று கூறியது.
அதன் தலைமை இயக்குநர் அஸ்மான் மஹ்மூத் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் அரிசி விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், தற்போதைய விலையில் அரிசி வாங்குவதில் மில்லர்கள் ஆர்வம் இழந்து வருவதால் இருப்பு வைப்பதைத் தடுக்கவும் இந்த அதிகரிப்பு அவசியம் என்றார்.