திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் ஏன் கண்களை மூடியே இருக்கிறார் என்பதற்கான காரணங்கள்:
திருப்பதி ஏழுமலையான் கோயிலை பற்றி சொல்ல வேண்டுமானால் தனியே பல புத்தகங்கள் போடும் அளவுக்கு அத்தனை அற்புதங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க பிரசித்தி பெற்ற ஒரு கோயில் இதுவாகும். விஷ்ணுவின் அவதாரம் என நம்பப்படும் வெங்கடேச பெருமானுக்கு இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்த கோயில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த புண்ணிய ஸ்தலத்தை பற்றி புராணக் கதைகளில் சொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் பெருமாள் தனது கண்களை ஏன் மூடியே வைத்திருக்கிறார் என்பது குறித்தும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக திருக்கோயில்களின் மூலக் கடவுள் சிலைகளின் கண்மலர்களை யோக நிலையில் வடிப்பார்கள். அவை திறந்திருப்பது போல் காட்டுவதற்கு சிலையின் கண்களின் மேல் வெள்ளியிலாலான திறந்த நிலையில் இருக்கும் கண் மலர்களைச் சாத்துவது வழக்கம். கடவுளின் யோக நிலை கடவுள் காலம் காலமாக உலக நன்மையின் சிந்தனையில் இருப்பதாக ஐதீகம்.
திருப்பதி திருமலை கோயிலில் வெங்கடேஸ்வரர் நவீன யுகத்தில் உறைவிடமாக வசிப்பதாக அறியப்படுகிறது. வெங்கடேச பெருமாளின் பார்வைக்கு சக்தி அதிகம் உண்டு. எனவே தவறு செய்பவர்கள் இறைவனின் கண்களை நேரடியாக பார்க்க முடியாது. இதனால்தான் வெள்ளை முகமூடியால் அவருடைய கண்கள் மூடப்பட்டிருக்கும்.
வியாழக்கிழமைகளில் அபிஷேகத்திற்கு முன்பாக நகைகளை கழற்றும் போது அவை எல்லாம் கொதிக்குமாம். மேலும் அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது 3ஆவது கண்களை திறக்கிறார் என்பது ஐதீகம். கோராவிலிருந்து எடுக்கப்பட்ட கூடுதல் தகவல்கள் இவை: வெங்கடேசராக மலையில் தோன்றுவதற்கு முன், நாராயணர் கிருத யுகத்தில் வராஹ ஸ்வாமியாகத் தோன்றினார்.
நாராயணா, தனது வெங்கடேஸ்வரா அவதாரத்தில் தங்குவதற்கு முன் வராஹ ஸ்வாமியிடம் அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது. சுவாமி புஷ்கரணிக்கு அருகில் வராஹ சுவாமி கோவில் உள்ளது. எனவே இன்று வரை பக்தர்கள் வெங்கடேசப் பெருமானைத் தரிசிப்பதற்கு முன் வராஹப் பெருமானைத் தரிசிப்பது வழக்கம் .
சிலைக்கு முதலில் சங்கு மற்றும் சுதர்சன சக்கரம் இல்லை . அவை பின்னர் சேர்க்கப்பட்டன. சிலை இரண்டு வெற்று மேல் கைகளுடன் நிற்கிறது. வியாழக்கிழமைகள் தோறும் கண்கள் சிறியதாக இருப்பதால் முகமூடி நகர்த்தப்படும் அப்போது தெய்வத்தின் கண்களை பக்தர்கள் தரிசிக்கலாம். அந்த நாட்களில் வெங்கடேச பெருமாளுக்கு இரண்டாவது அர்ச்சனை நடைபெறும். அப்போது அவருடைய நகைகள் களையப்படும். பெருமாளுக்கு இடப்படும் நாமத்தின் அளவு குறைக்கப்படும். அப்போது அவருடைய கண்கள் நன்றாக தெரியும்படி செய்வார்கள்.