மலாவி நாட்டில் துணை அதிபரின் இறுதி ஊர்வலத்துக்குள் கார் புகுந்தது-கர்ப்பிணி உள்பட 4 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை அதிபர் சவுலோஸ் சிலிமா. கடந்த 10-ந் தேதி அவர் தனது குடும்பத்தினருடன் தலைநகர் லிலோங்வேயில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டார். முசுசூ நகரில் அந்த விமானம் தரையிறங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அங்கு மோசமான வானிலை நிலவியதால் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே தலைநகர் லிலோங்வேக்கு திரும்பும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் அந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. எனவே மாயமான விமானத்தை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் உதவியுடன் தேடும் பணி நடைபெற்றது.  இதில் அங்குள்ள சிகன்காவா மலைப்பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த விபத்தில் துணை அதிபர் சவுலோஸ், அவரது குடும்பத்தினர் உள்பட 10 பேர் பலியாகினர். இதனையடுத்து சொந்த ஊரான சைப்பே நகரில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது.

இந்த இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் அவரது உறவினர்கள், நண்பர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது அந்த வழியாக சென்ற கார் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் அந்த கார் இறுதிச்சடங்கு ஊர்வலத்துக்குள் தறிகெட்டு ஓடியது.எனவே அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓட்டம் தறிகெட்டு ஓடியது.எனவே அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓட்டம் பிடித்தனர். எனினும் இந்த சம்பவத்தில் கர்ப்பிணி உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். துணை அதிபரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கார் மோதி இறந்து போன சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here