கோலாலம்பூர்:
நேற்றிரவு சுபாங் ஜெயாவில் உள்ள சொகுசுமாடிக் குடியிருப்பு ஒன்றின் 12வது மாடியில் இருந்து விழுந்து வெளிநாட்டவர் ஒருவர் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.
ரிதம் அவென்யூ சொகுசுமாடிக் குடியிருப்பில் நடந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு இரவு 8.19 மணிக்கு அவசர அழைப்பு வந்தது.
“உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தபோது, ஒரு கட்டிடத்தின் நடைபாதையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தலை, உடல் மற்றும் கால்களில் பலத்த காயங்களுடன் கிடந்தார்.
சுங்கை பூலோ மருத்துவமனையிலிருந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரு ஆம்புலன்ஸில் வந்த மருத்துவ உதவியாளர் குறித்த ஆடவர் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஆரம்ப விசாரணைகள் மற்றும் CCTV காட்சிகளில் அடிப்படையில், பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர் 12A மட்டத்திலிருந்து குதித்து கட்டிடத்தின் 7 வது மாடியின் கூரையின் மீது விழுந்தது தெரியவந்தது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அந்த நபரை கூரையில் இருந்து கீழே வரும்படி வற்புறுத்த முயன்றனர், ஆனாலும் குறித்த ஆடவர் அவர்களது வேண்டுகோளைக் கேட்கவில்லை என்று வான் அஸ்லான் கூறினார்.
“இறந்தவர் 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் சமீபத்தில் கட்டிடத்தின் 12A அலகில் ஒரு மாதமாக வசித்து வந்தார் மற்றும் வேலையில்லாமல் இருந்தார் என்றும், அவர்வ்தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது,” என்று அவர் கூறினார்.
இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனைக்காக உடல் செர்டாங் மருத்துவமனை தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
“இந்த சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணை அதிகாரி அகமட் ஜரின் அப்த் ரஷீத்தை 019-9964111 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணையில் உதவலாம் மற்றும் தகவல் தெரிவிக்கலாம்,” என்று அவர் கூறினார்.




















