(ரெ. மாலினி)
மலாக்கா:
64 ஆண்டு மலாக்கா இந்திய ஆசிரியர்கள் கூட்டுறவு கழகத்தின் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய சரித்திர மிக்க நாளாக புதிய அலுவலக கட்டட திறப்பு விழா கழகத்தின் தலைவர் என்.எஸ் கமலநாதன் தலைமையில் மாபெரும் திறப்பு விழா கண்டது.

கழக நிர்வாக உறுப்பினர்கள் உழைப்பு, ஆசிரியர்களின் ஆதரவு மற்றும் சிறந்த தலைமைத்துவத்தின் திறமான திட்டமிடல் வழி வெ 7 லட்சம் செலவில் தாமான் எங்காங் வணிக வளாகத்தின் இரண்டு மாடி கட்டிடம் வாங்கப்பட்டு மாண்புடன் காட்சியளிக்கிறது.

நேற்று அக்கட்டட திறப்பு விழாவை மலாக்கா மாநில கூட்டுறவு கழக வாரிய இயக்குனர் முஸ்தாபா கமால் பின் முகமட் நூர் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

அதிகமான ஆசிரியர்கள் கூட்டுறவு கழகத்தில் உறுப்பினர்களாக பதிவு பெற்று இதில் கிடைக்க கூடிய பயனை உபயோகிக்க வேண்டும் என்றும் கூட்டுறவு கழகம் திறமையாக அதன் நிதி விவகாரங்களை கையாளும் திறன் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மலாக்காவில் 7 கட்டிடங்கள் மலாக்கா இந்திய ஆசிரியர்கள் கூட்டுறவு கழகத்திற்கு சொந்துடமையாக இருந்தாலும் இக்கட்டடம் கழகத்தின் அலுவலகம் முறையே இயங்கும். 250 உறுப்பினர்களுடன் இயங்க இருக்கும் இக்கழகம் தொடர்ந்து புதியச் சொத்துக்களை வாங்கும் முயற்சியில் வாங்க முனைப்புக் கொண்டு உள்ளோம் என்றும் அனைத்து வகையிலும் ஆதரவு வழங்கிய அனைவருக்கும் கமல நாதன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
கட்டிட திறப்பு விழாவில் முன்னாள் இந்திய ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.





















