சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்!!

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர், சிங்கப்பூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர், வரும் நவம்பர் 20-ஆம் தேதி முதல் டிசம்பர் 15-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இதில், நடப்பு உலக சாம்பியனும், சீன வீரருமான டிங் லிரனும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷும் மோத உள்ளனர்.

இந்தப் போட்டியை சென்னை, டெல்லி, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் நடத்த விருப்பம் தெரிவித்து விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டிருந்தன. இதில், போட்டியை எங்கு நடத்துவது என்பது தொடர்பாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அதிகாரிகள் ஆய்வுசெய்தனர்.

அதன்படி, சென்னை வந்த அதிகாரிகள், வர்த்தக மையம், நேரு விளையாட்டு அரங்கம் ஆகிய இரண்டு இடங்களை ஆய்வுசெய்தனர். இந்நிலையில், சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு, உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறியுள்ள 2-ஆவது தமிழ்நாட்டு வீரர் குகேஷ் என்பதால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here