டி20 உலகக்கோப்பையை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ இன்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் வழங்கி கவுரவித்தது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடத்தப்பட்ட டி20 உலகக்கோப்பை தொடரில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. மிகவும் த்ரில்லிங்காக நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது.
17 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இந்திய அணி வீரர்கள் இன்று வெஸ்ட் இண்டீசின் பார்படோஸில் இருந்து நாடு திரும்பினர். அவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.