ஜோகூர் பாரு:
மலேசிய சூப்பர் லீக்கில் ஜோகூர் JDT அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றிவாகை சூடியதைக் கொண்டாடும் முகமாக வரும் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையை சிறப்பு விடுமுறையாக ஜோகூர் மாநில அரசு அறிவித்துள்ளது.
JDT காற்பந்தாட்ட அணி தொடர்ந்து பத்தாவது முறையாக மலேசியா சூப்பர் லீக்கில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தர் இந்த ஆணையை பிறப்பித்ததாக டான் ஶ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.
பொது விடுமுறை சட்டத்தின் 9(1) பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த விடுமுறை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.






















