மோசமான வெள்ளத்துக்கு 24 லட்சம் மக்கள் பாதிப்பு

கவ்ஹாத்தி: அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்துக்கு அங்குள்ள 30 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 24 லட்சத்து 50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது. பல இடங்களில் ஆறுகள் உடைப்பு எடுத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் ஓடிவருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தாண்டு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆகவும் நிலச்சரிவு, புயல் காரணமாக 12 பேரும் உயிரிழந்துள்ளனர். கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள திப்ருகர் மாவட்ட மக்களுடன் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கலந்துரையாடினார். வெள்ளம் மாநிலம் முழுவதும் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின் கீழ் இக்கட்டான காலகட்டத்திலும் சுத்தமான குடிநீரை வழங்கி வருதாகவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here