ஜப்பானின் மேற்கு ஒகசவாரா தீவுகளில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.02 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு ஒகசவாரா தீவுகளுக்கு அப்பால் 530 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் அந்நாட்டு அரசு விடுக்கவில்லை. மேலும் இந்தஇந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.
முன்னதாக, கடந்த 4ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.