கினாபாலு மலையிலிருந்து இறங்கும்போது காயமுற்ற சிங்கப்பூர் பெண் பாதுகாப்பாக மீட்பு

கோலாலம்பூர்:

பா மாநிலத்தில் உள்ள பிரபலமான கினாபாலு மலையிலிருந்து இறங்கும்போது, காலில் காயமுற்ற சிங்கப்பூரைச் சேர்ந்த மாது ஒருவர் நேற்று (ஜூலை 11) தீயணைப்பு படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட 41 வயதான பெண் கினாபாலுவிலிருந்து இறங்கும்போது 8.3 கிலோமீட்டர் தூரம் கடந்த பிறகு, வழுக்கி விழுந்தார்.

குறித்த அப்பகுதி, மலை உச்சிக்கு 200 மீட்டர் கீழே இருக்கிறது என்று, சாபா தீயணைப்பு, மீட்புச் சேவைப் பிரிவின் செயல்பாட்டு நிலைய பதில் தலைவர் ரிக்கி சிங் ராம்டே கூறினார்

மேலும் இதனால் அந்த மாதின் இடது கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படுவதாகவும், அப்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here