கோலாலம்பூர்:
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் நவம்பர் 11-ஆம் தேதிக்குள் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் வலியுறுத்தியுள்ளார்.
இந்த பரிசோதனையை நாடாளுமன்றக் கிளினிக்கில் அல்லது தனியார் மருத்துவ மையங்களில் செய்யலாம் என்று அவர் சொன்னார்.
இதற்கு இணங்கத் தவறும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்றும், மருத்துவப் பரிசோதனைக்குத் தேவையான விவரங்கள் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டக் கடிதத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த மருத்துவப்ப ரிசோதனை செய்துகொள்வதற்கான இறுதிநாள் நவம்பர் 11-ஆம் தேதி என்றும் அவர் சொன்னார்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை நாடாளுமன்ற கிளினிக் தலைவர் மற்றும் சுகாதார ஆலோசகருமான டாக்டர் முருகேசு ராஜுவிடம் பெறலாம் என்று தெரிவித்தார்.





















