நிறைய பேரின் வருகையை விட நிறைவானவர்கள் வருகையே சிறப்பு: சரவணன்

இந்துகளின் உணர்வுக்கு அதிக மதிப்பளித்து வரும் மலேசிய இந்து சங்கத்தின் 47ஆவது தேசிய ஆண்டுக்கூட்டத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத்தலைவருமான டத்தோஶ்ரீ எம்.சரவணன் தமதுரையில் தெரிவித்தார்.

1980ஆம் ஆண்டு தொடங்கி மலேசிய இந்து சங்கத்துடன் எனக்கான உறவு இருக்கிறது. ஆண்டுக்கூட்டத்தில் நிறைய பேர் வருவதை விட நிறைவானவர்கள் கலந்து கொள்வதே சிறப்பானது என்றார்.

முன்பெல்லாம் வானொலி, பத்திரிகை மூலம் மட்டுமே செய்திகளை அறிந்து கொள்ள முடியும். ஆனால் தற்பொழுது நாம் சமூக ஊடகங்களால் சூழப்பட்டிருக்கிறோம். சமூக ஊடகத்தில் கருத்துகளையும் குறைகளையும் கூறுவதற்கு என்றே பலர் இருக்கின்றனர். அவர்களை கடந்து  சென்றால் மட்டுமே நம்முடைய இலக்கை அடைய முடியும் என்றார். இந்து சங்கத்தின் தலைவர் சங்கபூஷண் தங்க கணேசன் சிறப்பான முறையில் செயலாற்றி வருகிறார். தலைவர் பதவி என்பது மலர் கிரீடம் அல்ல… அது முள் கிரீடம் என்றும் டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.

மேலும் மஇகா தற்பொழுது டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் சிறப்பாக இயங்கி வருகிறது. அவரின் முயற்சியில் மஇகா சொந்த கட்டடத்தை எழுப்பி வருகிறது. சொந்த கட்டடம் எழுப்பட்ட பிறகு சமய நிகழ்வுகளுக்கு வேறு இடம் தேட வேண்டியிருக்காது என்றார்.

47ஆவது ஆண்டுக்கூட்டத்தில் தலைமையுரையாற்றிய சங்கத்தின் தேசியத் தலைவர் சங்கபூஷண் தங்க கணேசன் சங்கத்தில் பல பிரிவினைகளாக இருந்தவர்களை ஒன்றிணைக்க செய்தேன். பிரச்சினைகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அதனை கடந்து விட வேண்டுமே சுமந்து செல்ல கூடாது.

என்னுடைய இந்த செயல் சிலருக்கு பிடிக்காமல் இருக்கிறது. அவர்கள் சங்கத்திற்கு எதிராக பிரச்சினைகளையும் அவதூறுகளையும் எழுப்பி வருகின்றனர். நாங்கள் செய்யும் அனைத்துமே சட்டத்திற்கு உட்பட்டது என்பதை இவ்வேளையில் தெரிவித்து கொள்கிறேன். அவதூறு பரப்புபவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.  நாம் அனைவரும் சமயத்தை வளர்க்க பாடுபடுகிறோம். அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here