ஸ்ரீ துர்க்கை அம்மன் ,ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயத்திற்கான நிலத்தை வாங்கும் முயற்சியில் ஆலய நிர்வாகம்

( ரெ. மாலினி )

மலாக்கா:

பாயா ரும்புட் பத்து 7¼ வட்டாரத்தில் 80ஆண்டுகளுக்கு மேலாக அருள்பாலித்துவரும் ஸ்ரீ துர்க்கை அம்மன் ,ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயம்  தற்பொழுது  ஆலய நிலத்தை வாங்கும் பணியில் முழு மூச்சாய்  ஈடுபட்டு வருகின்றனர்.

அமரர் முனியாண்டியால்  தோற்றவிக்கப்பட்ட இவ்வாலயம் அவரது  காலத்திற்குபின்பு அவரது மகன் சக்தி உபாசகர் மாச்சாப்  ஆலயத்தை  முழுமையாக பராமரித்து, அருள் வாக்கு சொல்லி பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் தலையாய பொறுப்பில் மாச்சாப் செயல்பட்டு வருகிறார். ஆலயம் அமைந்திருக்கும் இடம் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தினால் நிலப்பிரச்சனை எதிர் நோக்கிய காரணத்தினால் நீண்ட ஒரு போரட்டத்திற்குப் பின்பு அதே நிலத்தை சுமார் 5 லச்சம் வெள்ளி செலவில்  வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொது மக்கள் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள்  வழங்கியுள்ள நிதி உதவியில் ஏறக்குறைய 70,000 வெள்ளி வசூலிக்கப்பட்டு நிலத்திற்கான 10  சதவீத பணத்தைச் முன் பணமாக செழுத்தி உள்ளனர், எனினும் நிலத்திற்கான மீதப்பணம் விரைவில் செழுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் .

உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் அதிகமான பக்தர்கள் இவ்வாலயத்திற்கு வருகின்றனர். அருள் வாக்கு பார்ப்பத்தில் பணத்தை ஒரு நோக்கமாக வைத்து இவ்வாலயம் செயல் படவில்லை. மாறாக பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதில் தான் இங்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என ஆலயத்திற்கு வந்திருந்த பல பக்தர்கள் தெரிவித்தனர்.

பில்லி சூனியம், நோய் பிணி, பொருளாதாரப் பிரச்சனை, வேலைப் பிரச்சனை, குழந்தை பாக்கியம் இல்லாமை , கல்வி, திருமணம் போன்ற பல்வேறு சிக்கல்கள் இங்கு அருள் வாக்கு வழங்குவதின் மூலமாக தீர்க்கப்படு வருவதாக   நம்பப்படுகிறது.

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அருள்வாக்கு பார்க்கப் படுவதோடு  பௌர்ணமி ,அமாவாசை தினங்களில் விஷேச  பூஜையும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஆலயத்தின் வருடாந்திர திருவிழா கோலாகலமாக கொண்டாடபடுகிறது.

ஆலயத்திற்கான நிலத்தை  வாங்க பலர் முன் வந்து உதவி உள்ளனர், எனினும் நிலத்தை வாங்குவதற்கான   பொருளாதர வலு போதுமானதாக இல்லாத காரணத்தினால் பொது மக்கள், ஆலய நிர்வாகம் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு உதவிகரம் வழங்க வேண்டும் என ஆலயத் தலைவர் சக்தி உபாசகர் மாச்சாப் கேட்டுக் கொண்டார்.

நிதி உதவி செய்ய விரும்பும் அன்பர்கள் கீழ்  கண்ட வங்கி கணக்கில் பணத்தைச் செழுத்தலாம். 

PERSATUAN PENGANUT  DEWI SRI DURGAIAMAN  BADRAKALIAMAN              ( 504124153037 MAYBANK ) 

தொடர்புக்கு :  0166766563 – Machap 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here